காதலர் தினத்தன்று வெளியாகிறது 'ஓ மை கடவுளே'

காதலர் தினத்தன்று வெளியாகிறது 'ஓ மை கடவுளே'

1 mins read
80c86a79-9b91-4666-a857-91c15bd4cf5b
வைபவ் ஜோடியாக தமிழில் 'லாக்கப்', அசோக் செல்வன் ஜோடியாக 'ஓ மை கடவுளே' ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார் வாணி. இவையிரண்டுமே அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் இரண்டு பெயரிடப்படாத படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்நிலையில் காதலர் தினத்தன்று வெளியாகிறது 'ஓ மை கடவுளே'. -

காதலர் தினம் நெருங்கி வருகிறது. இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தங்களது அபிமான நாயகர்கள், நாயகிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வழக்கம்போல் இந்தாண்டும் புதிதாக அறிமுகமாகியுள்ள நாயகிகள் குறித்து தெரிந்த தகவல்கள் அனைத்தையும் ரசிகர்கள் பரவலாகப் பகிர்ந்து வருகிறார்கள். கோடம்பாக்கத்தில் அண்மையில் அறிமுகமாகியுள்ள சில நாயகிகள் குறித்து பார்ப்போம்.

'மாயா', 'ஆஹா', 'தெய்வமகள்' உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் ஏற்கெனவே ஏராளமான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் வாணி போஜன். இவர் தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா தயாரித்த 'மீக்கு மாத்திரமே செப்தா' என்ற படத்தில் அறிமுகமானார். இதையடுத்து வைபவ் ஜோடியாக தமிழில் 'லாக்கப்', அசோக் செல்வன் ஜோடியாக 'ஓ மை கடவுளே' ஆகிய இரு படங்களில் நடித்து முடித்துள்ளார் வாணி. இவையிரண்டுமே அடுத்தடுத்து வெளியாக உள்ளன. மேலும் இரண்டு பெயரிடப்படாத படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்நிலையில் காதலர் தினத்தன்று வெளியாகிறது 'ஓ மை கடவுளே'.