நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை. எனினும் அவருக்குத் திருமணப் பரிசளித்துள்ளார் தனுஷ்.
இவர் நாயகனாக நடிக்கும் 'கர்ணன்' படத்தில் யோகிபாபுவும் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் நேற்று முன்தினம் கலந்துகொண்டார் யோகி. அப்போது படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
யோகிபாபு வந்திருப்பதை அறிந்த தனுஷ், உடனடியாக ஒரு தங்கச் சங்கிலியை வாங்கி வரச்செய்து அதை யோகிபாபுவுக்கு அணிவித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தனுஷின் அன்பு தன்னை நெகிழ வைத்ததாகக் கூறியுள்ளார் யோகிபாபு.
மார்ச் மாதம் சென்னையில் இவரது திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அதில் ரஜினி கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறாராம் யோகிபாபு.

