சுடச் சுடச் செய்திகள்

நடுவானில் வெளியிடப்பட்டது ‘சூரரைப் போற்று’ பாடல்

முன்பே அறிவித்தது ‘சூரரைப் போற்று’ படத்தின் பாடல் வெளியீடு நடுவானில், பறக்கும் விமானத்தில் நடந்தது. 

அரசுப் பள்ளியில் பயிலும் நூறு ஏழை மாணவர்களை இப்படக்குழுவினர் விமானத்தில் அழைத்துச் சென்றனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு ‘வெய்யோன் சில்லி’ என்ற ஒற்றைப் பாடல் மட்டும் இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. 

சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் கீழ் படிக்கும் எழுபது மாணவர்களும் இந்தப் பயணத்தில் இணைந்தனர். மேலும் சூர்யா, சிவகுமார், இயக்குநர் சுதா கொங்கரா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. 

விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இருந்த மாணவர்களின் கனவை சூர்யா இதன்மூலம் நனவாக்கி உள்ளார். இதற்காக கட்டுரைப் போட்டி நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்தார்களாம்.

எழுபது மாணவர்கள் விமானத்தில் பயணம் மேற்கொண்டனர் எனில், முப்பது மாணவர்கள் தங்களது பெற்றோரை அனுப்பி வைத்துள்ளனர்.

தங்களுக்கு மகிழ்ச்சி கிடைப்பதைவிட பெற்றோர் மகிழ்ச்சி அடைய வேண்டும் எனும் எண்ணத்தில் அவர்கள் இந்த முடிவு எடுத்ததாக அகரம் அறக்கட்டளை குழுவினர் தெரிவித்தனர்.

“இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை அளித்த டெக்கான் விமான நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. 

எனவே இப்படம் தொடர்பான நிகழ்வை விமான நிலையத்தில் நடத்துவதும், பாடலை விமானத்தில் வைத்து நடுவானில் வெளியிடுவதும் தான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதினோம்,” என ‘சூரரைப் போற்று’ படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்தப் பிரமாண்டமான நிகழ்வு சூர்யாவின் ரசிகர்களை வெகுவாக உற்சாகப்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon