சமுத்திரகனி நடித்த படத்தின் தலைப்பு மாறுகிறது

சமுத்திரகனி நடித்த படத்தின் தலைப்பு மாறுகிறது

1 mins read
d26edf3e-9b19-4de1-8136-d83a8649c427
கீரா இயக்கத்தில் சமுத்திரகனி, சாந்தினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எட்டு திக்கும் பற'. படம்: ஊடகம் -

கீரா இயக்கத்தில் சமுத்திரகனி, சாந்தினி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எட்டு திக்கும் பற'. ஆணவக் கொலையை எதிர்க்கும் படைப்பாக இது உருவாகி உள்ளது. இதில் அம்பேத்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி. சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கதாபாத்திரமாக இது சித்திரிக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில், படத்தின் தலைப்புக்கு தணிக்கைத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் தலைப்பை மாற்ற உள்ளதாகத் தகவல். ஒரே இரவில் நடக்கும் கதையை மொத்தமாக ஒரே புள்ளியில் இணைப்பது தான் படத்தின் சுவாரசியமான அம்சமாம்.