கணவர் குறித்து பதிவிட்ட பாவனா

கணவர் குறித்து பதிவிட்ட பாவனா

1 mins read
bceb9c8c-dd26-489e-bf96-8aa515e20339
கணவர் நவீனுடன் பாவனா. படம்: இன்ஸ்டகிராம் -

சிறந்த உறவுகள் நட்பில்தான் தொடங்கும் என்பதைப்போல் தாம் காதலில் விழுந்து ஒன்பது ஆண்டுகளாகி விட்டன என்று தமது கணவர் நவீன் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை பாவனா.

மேலும், "அனைத்துத் தடைகளையும் எதிர்த்துப் போராடுவோம், சேர்ந்திருப்போம்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு நவீனைத் திருமணம் செய்து கொண்டபின் திரையுலகில் இருந்து விலகிய பாவனா, பின்னர் '96' படத்தின் கன்னட மறுபதிப்பில் திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து மறுபிரவேசம் செய்தார். இந்நிலையில் கணவர் நவீன் குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

"நம்மைப் பிரிக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் கடந்து இன்னும் வலிமையாக சேர்ந்திருக்கிறோம். உன்னை 2011இல் சந்தித்தபோது நீதான் என்னவன் என்று எனக்கு அப்போது தெரியாது. இருவரும் நண்பர்களாக மாறினோம். நீ நீயாக இருப்பதற்கு நன்றி," என்று தெரிவித்துள்ளார் பாவனா.