போஸ் வெங்கட் இயக்கும் 'கன்னி மாடம்'

போஸ் வெங்கட் இயக்கும் 'கன்னி மாடம்'

1 mins read
d96a1160-de9b-4bdb-ac5d-294e657a5905
'கன்னி மாடம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பரத், படக்குழுவினர். படம்: ஊடகம் -

நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில் உருவாகும் படம் 'கன்னி மாடம்'. புதுமுகங்கள் ஸ்ரீ ராம், காயத்ரி நடித்துள்ளனர்.

சின்னத்திரை தொடர்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் போஸ் வெங்கட். பின்னர் தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ளார். ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார்.

"தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எனது அனுபவத்தின் துணையோடு யதார்த்தமான படைப்பை தர முயற்சி செய்திருக்கிறேன்," என்கிறார் போஸ் வெங்கட்.