'தள்ளிப் போகாதே' தலைப்பை அறிவித்த படக்குழு

'தள்ளிப் போகாதே' தலைப்பை அறிவித்த படக்குழு

1 mins read
51ee6196-71bb-4a88-8172-c2480b98bf48
அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'தள்ளிப் போகாதே' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம் -

கண்ணன் இயக்கத்தில் அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் படத்துக்கு 'தள்ளிப் போகாதே' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்ற சுவரொட்டியை படக்குழு நேற்று வெளியிட்டது. கோபி சுந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அதர்வா முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரியாகவும், அனுபமா நடனக் கலைஞராகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அனுபமாவின் பிறந்தநாளையொட்டி இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்த படத்தின் தலைப்புடன் கூடிய சுவரொட்டி வெளியிடப்பட்டது.

"இதை விடச் சிறந்த பிறந்த நாள் பரிசை எனக்கு யாராலும் அளிக்க இயலாது," என்று 'தள்ளிப் போகாதே' படக்குழுவுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.