விஜய்யை வைத்துப் படம் இயக்கும் தமது விருப்பம் விரைவில் நடந்தேறும் எனத் தெரிவித்துள்ளார் நடிகர் பார்த்திபன்.
அண்மையில் டுவிட்டர் மூலம் அவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது "விஜய்யும் பார்த்திபனும் இணைந்தால் அது செம மாஸ்," என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டார்.
அதற்குப் பதிலளித்த பார்த்திபன், "மாஸுக்கு 'மாஸ்டரை' பிடிக்கும். மாஸ்டருக்கு இந்த நண்பனை பிடிக்கும். 'நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்க சொன்னார்.
"பின்னர் 'அழகிய தமிழ் மக'னுக்கு எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த கட்டத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்," என்று பதிவிட்டுள்ளார்.
பார்த்திபனின் இந்த பதிவு விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'மாஸ்டர்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது.
இதையடுத்து விஜய்யின் புதிய படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

