தனுஷுக்கு கொலை மிரட்டல்

1 mins read
8aeb7887-d456-4d6b-a6e4-120dade3494f
தனுஷ் மற்றும் படக்குழுவினரை மிரட்டும் வகையில் காணொளி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. படம்: இணையம் -

தனுஷ் நடிக்க, மாரி செல்வ ராஜ் இயக்கும் 'கர்ணன்' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனுசுக்கு கொலைமிரட்டல் வந்துள்ளது.

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பேசும் காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில் தங்கள் சமுதாயத்தைப் பற்றி அவதூறு பரப்பும் வகையில் திரைப்படம் எடுத்தால் தலை இருக்காது, வெட்டிக் கொல்வோம் என்று தனுஷ், மாரி செல்வராஜ் ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு மிரட்டும் வகையில் பேசியுள்ளார் அந்த இளைஞர்.

இதையடுத்து கொலை மிரட்டல் தொடர்பாக 'கர்ணன்' படக்குழு சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

#தனுஷ் #தமிழ்முரசு #கொலைமிரட்டல்

குறிப்புச் சொற்கள்