நாயகன், நாயகி போட்டி போட்டுக்கொண்டு நடித்த படம்

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பொம்மை’. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. சரியாக திட்டமிட்டதால் படப்பிடிப்பு வேகமாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்றுள்ளதாம். சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். வி.மருது பாண்டியன், ஜாஸ்மின் சந்தோஷ், தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். மிக வித்தியாசமான கதைக்களத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் பிரியாவும் போட்டி போட்டுக்கொண்டு அற்புதமான நடிப்பை வழங்கி இருப்பதாகப் படக்குழுவினர் பாராட்டுகின்றனர். படம் விரைவில் திரைகாண உள்ளது.