அனுஷ்கா: பெற்றோர் கைகாட்டுபவர்க்கே நான் என் கழுத்தை நீட்டுவேன்

2 mins read
864a0377-84cc-4a96-9208-0bf174cc151d
என் பெற்றோர் யாரைக் கைகாட்டி இந்த மாப்பிள்ளையை நீ கட்டிக்கொள் என்று சொல்கிறார்களோ, அவருக்கு நான் என் கழுத்தை நீட்ட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.  படம்: ஊடகம் -

என் பெற்றோர் யாரைக் கைகாட்டி இந்த மாப்பிள்ளையை நீ கட்டிக்கொள் என்று சொல்கிறார்களோ, அவருக்கு நான் என் கழுத்தை நீட்ட தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

"ஒருசமயம் நான் காதலிக்கிறேன் என்றார்கள், பின்னர் நான் ரகசிய திருமணம் செய்துகொண்டேன் என்று கிசுகிசுத்தார்கள். இப்போது கிரிக்கெட் வீரர் ஒருவருடன் சுற்றிக்கொண்டுள்ளேன்," என்கிறார்கள்.

ஏன்தான் இப்படி நாளும் விதவிதமாய் அர்த்த மற்ற வதந்திகளைப் பரப்புகிறார்களோ என்று வேதனை தெரிவித்துள்ள அனுஷ்கா, இந்த பொய்ச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

ஆந்திர சினிமாவில் நடிகையாக அடி எடுத்து வைத்து, பின்னர் தனது ஆளுமையான தோற்றத்தினால் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா.

'அருந்ததி', 'பாகுபலி', 'ருத்ரமாதேவி', 'பாகமதி' உள்ளிட்ட பல படங்களிலும் ராணி கதாபாத்திரங்களில் நடித்தவர் பின்னாளில் ரசிகர்களின் ராணியாகவே மாறிப்போனார்.

இவர் சினிமாவில் அறிமுகமானது முதல், அனுஷ்கா தொழிலதிபரைக் காதலிக்கிறார், மருத்துவரைக் காதலிக்கிறார், தன்னுடைய சக நடிகர்களுடன் காதலில் இருக்கிறார் என்று பல கிசுகிசுக்கள் வெளியாகின. ஒருசில செய்திகள் அவர் ரகசியமாக திருமணம் செய்துவிட்டார் என்றெல்லாம் வெளியாகி பரபரப்பைக் கூட்டின.

38 வயதாகி இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவருடன் காதலில் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் அந்த வீரரைத் திருமணம் செய்துகொள்ள உள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரி வித்துள்ள அனுஷ்கா, "காதல், திருமணம் என்றெல்லாம் என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. பல தடவை எனக்கு திருமணமும் செய்துவைத்து விட்டார்கள். ஒரு தொழிலதிபரைக் காதலிக்கிறேன் என்றனர். டாக்டரை விரும்புவதாகக் கூறினார்கள். அதன்பிறகு என்னுடன் நடித்த கதாநாயகர்களுடனும் என்னை இணைத்துப் பேசினார்கள்.

"இப்போது கிரிக்கெட் வீரரை காதலிக் கிறேன் என்கின்றனர். இதில் எந்த உண்மை யும் இல்லை. ஏன் இப்படி இல்லாதது பொல்லாதது எல்லாம் கூறுகிறார்கள் என வருத்தமாகவும் உள்ளது. நடிகைகள் பற்றி இதுபோல் வதந்திகள் பரவுவது வழமைதான் என்றாலும், எனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டேன். அவர்கள் முடிவுக்கு தலையாட்டு வேன்," என்று கூறியுள்ளார் அனுஷ்கா.