குத்துச்சண்டை வீரராக ஆர்யா

குத்துச்சண்டை வீரராக ஆர்யா

1 mins read
f93c8f2d-b94f-40ad-9182-f9e93ad3bf33
பா.ரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தில் வடசென்னையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரராக நடிப்பதற்கு தான் தயாராகிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் ஆர்யா. படம்: ஊடகம் -

'அட்டகத்தி', 'மெட்ராஸ்', 'கபாலி', 'காலா' உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கவுள்ள புதிய படத்தில் வடசென்னை குத்துச் சண்டை வீரராக நடிப்பதற்கு தான் தயாராகிவிட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் ஆர்யா (மேல் படம்).

குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கடந்த சில மாதங்களாகவே கடுமையான உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு, கதைக்கேற்ப தனது உடற்கட்டை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஆர்யா, தற்போது அதற்கான தோற்றத்துடன் மெருகேறி உள்ளார்.

அதையடுத்து உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்வது போன்ற ஒரு காணொளியை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஆர்யா, நான் எனது 30வது படத்திற்கு தயார் என்று தெரிவித்துள்ளார். அந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் இப்போது வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

குத்துச் சண்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் புதிய படத்திற்காக தனது உடலை கரலை கரலையாக முறுக்கேற்றி வைத் துள்ள ஆர்யா, அவரது இப்போதைய தோற்றத்தையும் டுவிட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

'மகாமுனி' வெற்றியைத் தொடர்ந்து சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 'டெடி' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நடிகர் ஆர்யா.

இதையடுத்து சுந்தர்.சி யின் 'அரண்மனை-3' படத்தில் நடிப்பதற்கு ஆர்யா ஒப்பந்தமாகியுளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள ஆர்யா, "இப்படம் என்னுடைய திரை வாழ்க்கையில் சவால் நிறைந்த படமாக இருக்கும்," என்று தெரி வித்து உள்ளார்.