இரும்பு மனிதன்: சம்பவங்களின் தொகுப்பு

1 mins read
653e1a0f-bc20-400c-9693-74f704f7eef2
டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் 'இரும்பு மனிதன்'. சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. படம்: ஊடகம் -

டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள படம் 'இரும்பு மனிதன்'. சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

'கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்' படத்தில் நடித்தவர் சந்தோஷ் பிரதாப். இம்முறை இவரது ஜோடியாக நடித்திருப்பவர் அர்ச்சனா.

மேலும் மதுசூதனன், கஞ்சா கருப்பு, நிஷாந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ்.மனோக் இசையமைத்துள்ளார்.

"பல்வேறு காலகட்டங்களில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பாக திரைக்கதை அமைந்துள்ளது. அந்தச் சம்பவங்களினூடே ஓர் உணர்வுபூர்மவான காதல் குறித்து விவரிக்கிறது இக்கதை.

"மேலும் நகைச்சுவை, அடிதடி உள்ளிட்ட பிற அம்சங்களும் இருக்கும். சென்னையில் முக்கிய காட்சிகளைப் படமாக்கி உள்ளோம். அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் இந்த 'இரும்பு மனிதன்' நிச்சயம் கவனிக்க வைப்பான்," என்கிறார் டிஸ்னி.

நாயகனும் நாயகியும் தாம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடித்திருப்பதாகக் குறிப்பிடும் டிஸ்னி, இருவருக்குமே தமிழ்ச் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என அடித்துச் சொல்கிறார். படம் குறித்த நேரத்தில் வெளி யாகும் என்றும் உறுதியளிப்பவர், பாடல்கள் இளையர்களைக் கவரும் என்கிறார்.