தனது வாழ்க்கைத் துணையை நேரில் சந்திக்கும்போது தன் இதயத்தில் நிச்சயம் தீப்பொறி பறக்கும் என்று நம்புவதாகச் சொல்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.
தனது அண்மைய பேட்டி ஒன்றில், காதலித்து திருமணம் செய்வதே தமது விருப்பம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்தாண்டு வெளியான 'ஹீரோ' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த இவர், தற்போது 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் அண்மைய பேட்டியில் தனது திருமணம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் கல்யாணி.
"என் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க மணமகன் தேவை என்று ஊடகங்களில் விளம்பரம் வெளியிட வேண்டிய அவசியமிருக்காது. காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன். எனது காதலில் சினிமாத்தனத்தையும் எதிர்பார்க்கிறேன். அதாவது என்னவரைச் சந்திக்கும்போது மனதில் தீப்பொறி பறக்கவேண்டும்," என்கிறார் கல்யாணி.

