விக்ரம் பிரபுவின் ‘அசுரகுரு’

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள ‘அசுரகுரு’ மார்ச் 13ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இப்படத்தில் மகிமா நம்பியார் இவரது ஜோடியாக நடித்துள்ளார். யோகிபாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகிய மூவரும் நகைச்சுவைக் கூட்டணி அமைத்துள்ளனர். ராஜ்தீப் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முழுமை அடைந்து தற்போது தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன. “விக்ரம் பிரபு நடித்த ‘வானம் கொட்டட்டும்’ தற்போது வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து ‘அசுரகுரு’ வெளியானால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். விறுவிறுப்பான திரைக்கதையும் காட்சி அமைப்பும் ரசிகர்களை நிச்சயம் கவரும்,” என்கிறார் இயக்குநர் ராஜ்தீப். இவர் மோகன்ராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.