‘மாநாடு’ படத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு

‘இந்தியன்-2’ படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து திரையுலகத்தினரைத் திகைக்க வைத்துள்ளது. இந்நிலையில் ‘மாநாடு’ படத்தில் பணியாற்றும் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. 

சுரேஷ் காமாட்சி தயாரிக்க, வெங்கட் பிரபு இயக்கத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அண்மைய விபத்து 3 உயிர்களைப் பலி வாங்கியதை அடுத்து ‘மாநாடு’ படத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு செய்துள்ளார் சுரேஷ் காமாட்சி. 

மொத்தம் 30 கோடி ரூபாய் மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தயாரிப்புத் தரப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் பிரீமியம் தொகையாகச் செலுத்தியுள்ளதாகத் தகவல். இதையடுத்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.