மார்ச் 6ஆம் தேதி வெளியாகிறது ‘பொன் மாணிக்கவேல்’

ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள படம் ‘பொன் மாணிக்கவேல்’. இப்படம் எதிர்வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியீடு காண உள்ளது. இதில் நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடித்துள்ளார். சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். “முதல் முறையாக பிரபுதேவா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் செலவு குறித்துக் கவலைப்படாமல் தயாரித்ததற்காக நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அனைவரையும் கவரும் வகையில் இசையமைத்துள்ளார் டி. இமான். படம் திட்டமிட்டபடி வெளியாகும்,” என்கிறார் இயக்குநர் முகில்.