பாலியல் தொல்லையை சந்தித்தேன் - ஹனிரோஸ்

பாலியல் தொல்லையை சந்தித்தேன் - ஹனிரோஸ்

1 mins read
44bc84fb-3c26-4a8d-ac0a-4c60cb95cd1a
தாம் நடிக்க வந்தபோது பாலியல் ரீதியில் தொல்லைகளை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார் நடிகை ஹனிரோஸ். படம்: ஊடகம் -

தாம் நடிக்க வந்தபோது பாலியல் ரீதியில் தொல்லைகளை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளார் நடிகை ஹனிரோஸ்.

'சிங்கம்புலி', 'மல்லுக்கட்டு', 'கந்தர்வன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவரை இன்றைய இளையர்களுக்குத் தெரியாமல் போகலாம்.

இந்நிலையில் அண்மைய பேட்டி ஒன்றில் தாம் பட வாய்ப்புகள் இல்லாமல் போராடிக்கொண்டிருந்த வேளையில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும் பெற்றோரும் உடன் இருந்ததால் அத்தகைய பிரச்சினைகளில் இருந்து தப்பினாராம்.

"உடல் ரீதியாக என்னை யாரும் துன்புறுத்தியதில்லை. அதேசமயம் பிரச்சினை வரும் என்று தெரிந்தால் தேடிவந்த வாய்ப்பாக இருந்தாலும் தவிர்த்துவிடுவேன். திரையுலகில் தற்போது என்ன நிலைமை என்று எனக்குத் தெரியவில்லை," என்று கூறியுள்ளார் ஹனிரோஸ்.