சிம்பு சம்மதித்தால் 'விண்ணைத் தாண்டி வருவாயா' இரண்டாம் பாகத்தை எடுக்க தயார் என்கிறார் இயக்குநர் கவுதம் மேனன்.
இந்தப் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இந்நிலையில் சமந்தா திரையுலகத்திற்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டதையும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டு கருத்துகளைப் பரிமாறி வருகின்றனர்.
இதையடுத்து 'விண்ணைத் தாண்டி வருவாயா' இரண்டாம் பாகம் வெளிவருமா என்று ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "சிம்பு தலையசைத்தால், கால்ஷீட் கொடுத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும்," என்று பதிலளித்துள்ளார் கவுதம் மேனன்.

