'இன்னும் கூட நம்ப முடியவில்லை'

1 mins read
e880a100-22e4-4e0a-ba9b-eff7b8c78035
'சூரரைப் போற்று' படத்தில் மதுரை தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. -

'சூரரைப் போற்று' படத்தில் மதுரை தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி.

இந்தப் படத்தில் நடிக்க தமக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார்.

'சர்வம் தாளமயம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், தற்போது சூர்யாவுக்கு ஜோடியாகி உள்ளார்.

"இயக்குநர் சுதா கொங்கராவிடம் இருந்து 'சூரரைப் போற்று' படத்துக்காக அழைப்பு வந்தபோது இன்ப அதிர்ச்சியாக உணர்ந்தேன். நேரில் சந்தித்தபோது மதுரை தமிழில் பேசவேண்டும் என்றார். தொடக்கத்தில் கஷ்டமாகத்தான் இருந்தது. எனினும் விடாமுயற்சியுடன் மதுரை தமிழில் பேசப் பழகிக்கொண்டேன்.

"மதுரை தமிழில் பேசும் ஒரு காணொளிப் பதிவை சுதா மேடமுக்கு அனுப்பினேன். அதைப் பார்த்த அடுத்த நிமிடமே என்னைத் தேர்வு செய்துவிட்டார். இதோ படமும் வெளியாகப்போகிறது. எனினும் இந்தப் படத்தில் நானும் இருக்கிறேன் என்பதை இதுவரையில் என்னால் நம்பவே முடியவில்லை," என்கிறார் அபர்ணா.