மலையாளப் படம் ஒன்றுக்காக கீர்த்தி சுரேஷ் வித்தியாசமாக தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். 16ஆம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படைத் தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் நான்காவது குஞ்சலி மரைக்காரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் மோகன்லால் நாயகனாக நடிக்கிறார்.
ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷும் மஞ்சு வாரியரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இதில் ஆர்ச்சா எனும் பாத்திரத்தில் கேரளத்துப் பாரம்பரிய உடை அணிந்து நடிக்கிறார் கீர்த்தி. அந்தத் தோற்றத்தில் அவர் காட்சியளிக்கும் புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

