'என்னுடைய பலமே சிரிப்புதான்'

'என்னுடைய பலமே சிரிப்புதான்'

1 mins read
428831bb-fb2a-46e9-8ff7-c0619b5d2c62
எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது பிடிக்கும் என்றும், அந்தச் சிரிப்புதான் தமது பலம் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். படம்: ஊடகம் -

தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் தனக்குப் புதிதாக ஒரு பாடத்தைக் கற்றுத்தருவதாகச் சொல்கிறார் நடிகை சமந்தா.

எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பது பிடிக்கும் என்றும், அந்தச் சிரிப்புதான் தமது பலம் என்றும் பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றதைப் பெருமை யாகக் கருதியதில்லை. ஆனால், நடிகர் சூர்யாவுடன் நடித்தபோது மட்டும் அதை நினைத்துப் பெருமைப்பட்டேன். ஏனெனில் கல்லூரியில் படித்தபோதே நான் அவரது தீவிர ரசிகை.

" எனக்குச் சவால்கள் ரொம்பப் பிடிக்கும். ஒரே மாதிரியாகத்தான் இந்தப் பெண்ணால் நடிக்கமுடியும் என்று கூறப்பட்டதை உடைத்துக் காட்டியதும் பெருமைக்குரிய விஷயம்தான். பத்தாண்டுகளாக சினிமாவில் நிலைத்திருப்பதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன்," என்கிறார் சமந்தா.