நீண்ட இடைவெளிக்குப் பின் ஜனகராஜ் நடிக்கும் திரைப்படம்

1 mins read
42881cd3-3574-495c-8832-7f2c1827a410
ஞானி பாலா இயக்கத்தில் பிரித்திப், பூர்னிஷா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஒபாமா உங்களுக்காக'. படம்: ஊடகம் -

ஞானி பாலா இயக்கத்தில் பிரித்திப், பூர்னிஷா, ஜனகராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஒபாமா உங்களுக்காக'. இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஜெயசீலன் தயாரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க, பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். "ஒபாமா என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் என்று பலரும் நினைக்கலாம். 'ஒ' என்பது கதாநாயகனின் 'இனிஷியல்.' 'பாமா' என்பது கதாநாயகியின் பெயர். இதுதான், 'ஒபாமா.' இன்றைய அரசியல் நிலவரத்தை நகைச்சுவையாக சொல்லும் படம் இது. நீண்ட இடைவெளிக்குப்பின், நகைச்சுவையில் ஜனகராஜ் கலக்கி இருக்கிறார். அவர் இதில் நடிப்பது எங்களுக்குப் பெரிய பலமாக அமைந்தது. அவரிடம் அந்த நகைச்சுவையும் அர்ப்பணிப்பும் அப்படியே உள்ளது. படம் விரைவில் வெளியீடு காணும்," என்கிறார் இயக்குநர் ஞானி பாலா.