விஜய்யை பார்த்து பிரமிக்கும் ஹிருத்திக் ரோஷன்

விஜய்யை பார்த்து பிரமிக்கும் ஹிருத்திக் ரோஷன்

1 mins read
e886faf3-934b-495c-83f0-fe06842a1642
நடனமாடும்போது  விஜய்யிடம் காணப்படும் சக்தியைக் கண்டு தாம் வியந்து போவதாகக் குறிப்பிட்டார் ஹிருத்திக் ரோஷன். படம்: சதீஷ் -

நடிகர் விஜய்யின் நடனம் தம்மைப் பிரமிக்க வைத்திருப்பதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்களுடன் உரையாடினார் ஹிருத்திக். அப்போது ஒரு பாடலுக்கு நடனமாடுமாறு ரசிகர்கள் அவரைக் கேட்டுக் கொண்டனர்.

இதை ஏற்று அவர் நடனமாடியபோது கைத்தட்டல் அரங்கை அதிர வைத்தது. இதையடுத்துப் பேசிய ஹிருத்திக், நடனமாடும்போது விஜய்யிடம் காணப்படும் சக்தியைக் கண்டு தாம் வியந்து போவதாகக் குறிப்பிட்டார்.

"நடனமாட வேண்டும் என்பதற்காகவே விஜய் உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதுகிறேன். அவரை நேரில் சந்திக்கும்போது அவர் என்ன வகையான உணவுகளை உட்கொள்கிறார் என்பதை நிச்சயம் கேட்டறிவேன்.

"அதன் மூலம் என்னால் மேலும் திறமையாக நடனமாட முடியும் என நம்புகிறேன்," என்றார் ஹிருத்திக் ரோஷன்.

#விஜய் #ஹிருத்திக் ரோஷன்

குறிப்புச் சொற்கள்