லண்டன் செல்ல முடிவெடுத்த நாயகி

லண்டன் செல்ல முடிவெடுத்த நாயகி

1 mins read
954b7794-cf26-4f44-8164-cfb772c27255
லண்டனுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவது குறித்து யோசித்து வருகிறாராம் நடிகை நிகிஷா படேல். படம்: ஊடகம் -

எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லாததால் லண்டனுக்குச் சென்று அங்கேயே நிரந்தரமாகத் தங்குவது குறித்து யோசித்து வருகிறாராம் நடிகை நிகிஷா படேல்.

தமிழில் 'தலைவன்' படம் மூலம் அறிமுகமானவர் நிகிஷா. இவரது பெற்றோர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். என்றாலும் நிகிதா படித்தது வளர்ந்தது எல்லாம் லண்டனில்தான்.

தொடக்கத்தில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தவர் பிறகு தன் திறமையை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்தார்.

இந்நிலையில் தாம் எதிர்பார்த்தபடி நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் சோர்வடைந்தவர், லண்டனுக்கே செல்ல முடிவெடுத்துள்ளார். அங்கு தங்கியிருந்தபடி உள்ளூர் படைப்புகளில் நடிக்க தீர்மானித்துள்ளார்.