விஜய் சில குறிப்பிட்ட காணொளிகளை ரசித்துப் பார்ப்பார் என்று வர்ஷா புது தகவலை வெளியிட்டுள்ளார். முன்னதாக விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பிகில்.
அந்த படத்தில் அவர் பெண்கள் காற்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்திருந்தார்.
அவருடன் நடித்தவர்களில் ஒருவரான வர்ஷா பொல்லம்மா அண்மையில் பேட்டி ஒன்றில் விஜய் பற்றி தெரிவித்துள்ளார்.
அது விஜய்க்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றியது. அதாவது விஜய்க்கு விலங்குகள் செய்யும் அட்டகாசங்கள் மிகவும் பிடிக்குமாம்.
யூடியூப் உள்ளிட்ட இணையத்தளங்களில் விஜய் இதுபோன்ற காணொளிகளைத்தான் பார்ப்பாராம். பூனைகள் செய்யும் சேட்டை, நாய்கள் செய்யும் சாகச காணொளிகளை விஜய் அதிகம் விரும்புவாராம். ஒருமுறை வர்ஷா இப்படி ஒரு வீடியோவை பார்த்துக் கொண்டிருந்தபோது விஜய்யும் அதை பார்த்து ரசித்து சிரித்தார் என அவர் கூறியுள்ளார்.
வர்ஷா பொல்லம்மா விஜய் சேதுபதியுடன் 96 படத்திலும், விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்திருந்தார்.

