தமிழ் படத்துக்கு புது வரவு ஸ்டெஃபி படேல்,

தமிழ் படத்துக்கு புது வரவு ஸ்டெஃபி படேல்,

1 mins read
b0f37fdc-24fc-4488-b29e-4cf9b6631400
டில்லியைச் சேர்ந்த விளம்பர அழகி ஸ்டெஃபி படேல், ஜார்கண்ட் மாநிலம் ஹசரியாபாத்தில் பிறந்தவர். படம்: ஊடகம் -

தமிழுக்கு மற்றுமோர் அழகி அறிமுகமாகிறார். டில்லியைச் சேர்ந்த விளம்பர அழகி ஸ்டெஃபி படேல், ஜார்கண்ட் மாநிலம் ஹசரியாபாத்தில் பிறந்தவர். படித்து முடித்து விட்டு விளம்பர அழகியாக அவர் வாழ்க்கையைத் துவங்கினார். 2014ஆம் ஆண்டு 'மிஸ் இந்தியா டீன்' போட்டியிலும் 2018ஆம் ஆண்டில் 'ஃபெமினா மிஸ் இந்தியா' போட்டியிலும் வெற்றி பெற்று புகழின் உச்சத்தை அடைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாக்புரி படம் ஒன்றில் அவர் அறிமுகமானார். அதன் பிறகு 'நின்னு தளச்சி' என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். அதன் பிறகு அனைத்துலக விளம்பர அழகிகள் போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். தற்போது அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் மூலம் ஸ்டெஃபி படேல் தமிழுக்கு வருகிறார். இதன் படப்பிடிப்புகள் தற்போது டெல்லி, ஆக்ரா பகுதிகளில் நடந்து வருகின்றன. அதில் ஸ்டெஃபி படேல் பங்கேற்று நடித்து வருகிறார்.