'புதுப்பேட்டை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
இரண்டாம் பாகத்திலும் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளார். '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன', 'இரண்டாம் உலகம்' என வித்தியாசமான கதைக்களங்கள் கொண்ட படங்களை இயக்கியவர் செல்வராகவன்.
'புதுப்பேட்டை'யில் தனது இளைய சகோதரர் தனுஷையே நடிக்க வைத்தார். இதன் மூலம் அதிரடி நாயகனாக உருவெடுத்தார் தனுஷ்.
இந்நிலையில் 'புதுப்பேட்டை 2'க்கான கதையை அவர் எழுதி முடித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிப்பார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் செல்வராகவன்.
இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பாகத்தில் சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. செல்வராகவனின் அறிவிப்பு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

