தெலுங்கு தேசம் செல்லும் பிரியா

தெலுங்கு தேசம் செல்லும் பிரியா

1 mins read
16e96e10-0654-4112-9f9c-ad3dab36c501
தமிழில் இருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்ட உள்ளார் பிரியா பவானி சங்கர். படம்: ஊடகம் -

தமிழில் இருந்து தெலுங்கு தேசம் சென்று வெற்றிக்கொடி நாட்ட உள்ளார் பிரியா பவானி சங்கர்.

மஞ்சு மனோஜ் தயாரிக்கும் 'அகம் பிரம்மாஸ்மி' தெலுங்கு படத்தில் இவரை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. ஸ்ரீகாந்த் என். ரெட்டி இயக்குகிறார்.

இது நேரடி தெலுங்குப் படம் என்றாலும் பிற மொழிகளிலும் வெளியாக இருப்பதால் அம்மொழிகளிலும் பிரியாவின் முதல் படமாக 'அகம் பிரம்மாஸ்மி' அமைய உள்ளது.

இப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் ராம்சரண் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். தெலுங்கில் அறிமுகமாவதால் உற்சாகமடைந்துள்ளதாக தனக்கே உரிய முகம் நிறைந்த புன்னகையுடன் சொல்கிறார் பிரியா பவானி சங்கர்.