'நாம் மனிதத்தை வென்றெடுக்க வேண்டும்'

'நாம் மனிதத்தை வென்றெடுக்க வேண்டும்'

2 mins read
5fd35cf2-a236-4877-9788-6960e612ab2b
இயக்குநராகவோ நாயகனாகவோ மிளிர வேண்டும் எனும் இலக்குகள் ஏதுமின்றி தாம் சென்னைக்கு வந்ததாக கூறுகிறார் நடிகர் போஸ் வெங்கட். படம்: ஊடகம் -

இயக்குநராகவோ நாயகனாகவோ மிளிர வேண்டும் எனும் இலக்குகள் ஏதுமின்றி தாம் சென்னைக்கு வந்ததாக கூறுகிறார் நடிகர் போஸ் வெங்கட்.

குணசித்திர, வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயரெடுத்த இவர் தற்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகும் 'கன்னிமாடம்' படம் ஆணவக் கொலைகளையும் சாதிய உளவியலையும் பதிவு செய்யப் போகிறது.

"திரையின் ஓரத்தில் நம் உருவம் தெரிந்தால்கூட கைத்தட்டல் கிடைக்கும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்தவன் நான். எந்த இலக்கும் இல்லை. ஆனால் நடிகனாகும் வாய்ப்பு அமைந்தது. நல்ல நண்பர்கள், வாசிப்பாளர்கள் பலருடன் பயணித்தேன்.

"இந்த நெடிய பயணம்தான் சினிமா என்பது வெறும் கைத்தட்டலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது வலிமையான ஆயுதம் என்பதை உணர்த்தியது," என்கிறார் போஸ் வெங்கட்.

சிறு வயது முதல் தாம் பார்த்து வரும் சாதி-யத்-தின் கோர முகத்-திற்குத் தீர்வு தேடி-ய -போ-து-தான் பெரி-யார், மார்க்ஸ், அம்-பேத்-கர் ஆகி-யோ-ரின் படைப்-பு-களைப் படிக்கத் தோன்-றி-ய-தா-கக் குறிப்-பி-டும் அவர், சென்-னை-யில் தாம் ஆட்டோ ஓட்-டிக் கொண்-டி-ருந்-த-போது சந்-தித்த ஒரு காதல் ஜோடி-யின் கதை மனதை ரண-மாக்-கி-ய-தா-கச் சொல்-கி-றார்.

"மனித சமூ-கத்-தின் ஏற்-றத் தாழ்-வு-களை உரு-வாக்-கும் ஆதிக்க உள-வி-யல் எனக்கு அதிர்ச்-சியை அளித்-தது. அப்-போது முதல் என் மன-தில் நான் உரு-வாக்-கிய கதை-தான் இப்-போது பட-மா-கிறது," என்-கி-றார் போஸ் வெங்-கட்.

"எனது சொந்த ஊரில் மதங்-க-ளை-யும் சாதி-க-ளை-யும் கடந்த பலர் உள்-ள-னர். அவர்-க-ளின் அன்பை மட்-டுமே சுமந்து, சென்னை வந்து வாழ்ந்து கொண்-டி-ருக்-கி-றேன். "சாதிய, மதத்-தைக் கடந்த மனிதம் பல-ரி-டம் உள்-ளது. சாதி-யத்தை வேர-றுத்து மனி-தத்தை மீட்-டெ-டுக்க வேண்-டும் என்-பதே எனது விருப்பம்," என்-கி-றார் போஸ் வெங்-கட்.