கடந்தாண்டு வெளியான 'தும்பா' படம் இளையர்களை கவர்ந்தது. இதில் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடித்திருந்தார்.
இதையடுத்து மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஹெலன்' படத்தின் தமிழ் மறுபதிப்பில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதில் அருண்பாண்டியனும் முக்கிய வேடம் ஏற்றுள்ளாராம். தந்தை, மகள் இடையேயான பாசத்தை விவரிக்கும் படைப்பாக இது உருவாகிறது.
இந்நிலையில் தனது புதிய புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் கீர்த்தி. இவற்றை வெகுவாக ரசிக்கும் பலர் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிர்ந்து வருகின்றனர். உடனே அவசரப்படாதீர்கள்.
"வாய்ப்புக்காக இப்படிச் செய்யவில்லை. வேறு முக்கியக் காரணங்களும் இல்லை," என கையோடு விளக்கமும் அளித்துவிட்டார் கீர்த்தி. எனவே படங்களை ரசிப்பது மட்டுமே இனி நம் வேலை.

