படம் தயாரித்து இயக்கப் போகும் முன்னாள் கதாநாயகி

1 mins read
6e2ddfad-734e-4834-a595-1807422186e8
உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு தனித்துவமான காதல் கதையை ரசிகர்களுக்குச் சொல்லப் போவதாகக் கூறுகிறார் காவேரி கல்யாணி. -

'சமுத்திரம்' படத்தில் நடித்த காவேரி கல்யாணியை சிலர் மறந்திருக்கலாம். 'கண்ணுக்குள் நிலவு', 'காசி' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் நடித்து வந்தவர் சில காலமாகத் திரையுலகில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளாராம் காவேரி கல்யாணி.

உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து ஒரு தனித்துவமான காதல் கதையை ரசிகர்களுக்குச் சொல்லப் போவதாகக் கூறுகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.