தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரிஷா: என்னைப் புரிந்து கொள்பவரை மணப்பேன்

3 mins read
edf344a6-4775-480b-abaa-643cbc37c5b1
என்னை கண்ணுக்குள் வைத்து  நன்றாகப் பார்த்துக் கொள்பவரையே நான் மணக்க விரும்புகிறன் என்கிறார் திரி‌ஷா. படம்: ஊடகம் -

எனது திருமணம் பெற்றோர் சம்மதத் துடன் நடக்க வாய்ப்பே இல்லை. அத் துடன் அவர்கள் சொல்வதையும் கேட்கமாட்டேன். நான் காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று திரிஷா கூறியுள்ளார்.

எனது காதலர் எனது மனதைப் புரிந்து கொள்பவராக, என் மனம் கவர்ந்தவராக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம் என்கிறார் திரிஷா.

தென்னிந்திய சினிமாவில் 18 வருடங்களாக கதாநாயகியாக கொடிகட்டிப் பறக்கும் திரிஷா, அண்மையில் ஒரு படவிழாவில் கலந்துகொள்ளாமல் போனதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

இந்நிலையில் ஹைதராபாத்தில் திரைச்செய்தி ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "தயாரிப்பாளர்களுக்கு நான் தொந்தரவு கொடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால் இதில் சிறிதும் உண்மை இல்லை. இந்தப் பழக்கம் என்னிடம் ஆரம்பத்தில் இருந்து அறவே இல்லை. வரச்சொன்ன நேரத்துக்கு வந்து படப்பிடிப்பு முடிவதுவரை இருந்துவிட்டு தான் செல்வேன். இதுவே எனது பழக்கம்.

அதுபோல் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிக்கும் நான் குறிப்பிட்ட நேரத்துக்கு சரியாக வந்துவிடுவேன்.

அண்மையில் எதிர்பாராதவிதமாக ஒரேநேரத்தில் இரண்டு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்ததால் என்னால் அப்படி போகமுடியாமல் சில சர்ச்சைகள் எழுந்தன.

"நான் திருமணம் செய்துகொள்வேன் என்று சொன்னேனே தவிர அதை எப்போது செய்துகொள்வேன் என்று சொல்லவில்லை. திருமண விஷயத்தில் குடும்பப் பெரியவர்களும் பெற்றோரும் சொல்லும் பேச்சைக் கேட்கமாட்டேன். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளையையும் மணக்க மாட்டேன். காதலித்துத்தான் திருமணம் செய்துகொள்வேன்.

"என்னை கண்ணுக்குள் வைத்து நன்றாகப் பார்த்துக் கொள்பவரையே நான் மணக்க விரும்புகிறன்.

அவர் திரைப்பட நாயகன் போன்றோ அல்லது ஆணழகராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிறம் விஷயத்திலும் எனக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அவருக்கு நல்ல மனது இருக்கவேண்டும். என்னைப் புரிந்துகொள்பவராகவும் நன்றாகப் பார்த்துக்கொள்பவராகவும் இருக்கவேண்டும். அந்தமாதிரி மனிதர் கிடைத்தால் உடனே திருமணம்தான். அதில் இனியும் காலம் தாழ்த்த வேண்டிய அவசியம் இல்லை," என்கிறார் திரிஷா.

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. இவர் ஆரம்ப காலத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர், பின்னர் தமிழ் சினிமாவில் அஜித், விஜய் ஆகிய முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.

பின்பு சுந்தர் சி இயக்கத்தில் 'அரண்மனை 2' படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று பெரிய அளவில் பாராட்டு களையும் பெற்றார். இதன்பின்னர், விஜய் சேதுபதி நடித்த '96' படத்தில் விஜய் சேதுபதிக்கு நாயகியாக நடித்து பிரபலம் அடைந்தார். இப்படம் மூலம் திரிஷா ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார், தற்பொழுது இவர் நல்ல கதை உள்ள திரைப்படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்தே விளம்பரப் படங்களிலும் நடித்து நாலு காசு பார்த்து வந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இவர் அப்பொழுது சோப்பு விளம்பரம் ஒன்றில் நடித்தி ருந்தார். இந்த விளம்பரத்தில் தற்பொழுது முன்னணி கதாநாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார்.

இ்க்காணொளியைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பல வருடத் திற்கு முன்பே திரிஷாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து நடித்துவிட்டாரா என காணொளி குறித்து கருத்துகள் பகிர்ந்துள்ளனர்.