நடிகர் பிரபாஸ் சம்பளம் ரூ.70 கோடி

1 mins read
9047312a-55b6-40e0-92a5-9a5b0f761866
'பாகுபலி' படத்துக்குப் பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  படம்: ஊடகம் -

'பாகுபலி' படத்துக்குப் பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாக் அஸ்வின் இயக்கும் புதுப்படம் ஒன்று தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இந்தப் படத்துக்கு தனக்கு ரூ.70 கோடி சம்பளம் வேண்டும் என்றும் 12 மாதங்களுக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்கவேண்டும் என்றும் அதையும் தாண்டி படப்பிடிப்பை நடத்தினால் மேலும் கூடுதல் சம்பளம் தரவேண்டும் என்றும் பிரபாஸ் நிபந்தனைகள் விதித்ததாகவும் இதனை பட நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிப்பதாக வெளியான தகவலை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

பாகுபலி படத்துக்கு பிறகு ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தயாராகி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு வந்த சாஹோ படத்துக்கு அவர் ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாகக் கூறப்பட்டது.