அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களில் கதாநாயகிகள் தங்களது வீரத்தைக் காட்டுவது இப்போது பிரபலமாகி வரும் நிலையில், "விஜயசாந்திக்குப் பிறகு சண்டைக் காட்சிகளில் பயப்படாமல் நடிப்பவர் நந்திதா ஸ்வேதாதான்,'' என்று இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன் பாராட்டி கூறியுள்ளார்.
நந்திதா ஸ்வேதா நடிப்பில், 'ஐ.பி.சி. 376' என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது. இப்படத்தில் நந்திதா நாயகியாக நடித்து இருக்கிறார். ''படத்தில் 4 சண்டைக் காட்சிகள் உள்ளன. அந்த சண்டைக்காட்சிகளில் நந்திதா 'டூப்' இல்லாமல் துணிச்சலாக நடித்துள்ளார். ஒரு சண்டைக் காட்சியை படமாக்கியபோது அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சிரத்தை எடுத்து நடித்தார் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுகின்றன,'' என்றார் ராம்குமார் சுப்பாராமன்.

