திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் கோலாலம்பூர் இசை நிகழ்ச்சி கொவிட் 19 நோய்ப்பரவல் குறித்த அக்கறைகளின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை (மார்ச் 14ஆம் தேதி) நடைபெறவிருந்த இந்நிகழச்சி, இப்போது ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
MITEC KL எனப்படும் மலேசிய அனைத்துலக வர்த்தக, கண்காட்சி நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெறும்.மார்ச் மாத நிகழ்ச்சிக்காக டிக்கெட்டுகளை வாங்கியோர் இவற்றை ஜூன் மாத நிகழ்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

