அமலா பால் காதலிப்பதாகத் தகவல்

அமலா பால் காதலிப்பதாகத் தகவல்

1 mins read
8e1c00ae-7321-4432-9a52-e8f0a51f9c32
விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் ஒருவரைக் காதலிப்பதாகவும் அவர் பெற்ற தாயைப் போல தம்மிடம் அன்பு காட்டுவதாகவும் கூறியிருந்தார் அமலாபால். -

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் ஒருவரைக் காதலிப்பதாகவும் அவர் பெற்ற தாயைப் போல தம்மிடம் அன்பு காட்டுவதாகவும் கூறியிருந்தார் அமலாபால்.

இந்நிலையில் அவர் பிரபல இந்திப் பாடகர் பவ்னிந்தர் சிங்கை காதலிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அண்மையில் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் தாம் ஒரு பெண்ணைக் கட்டி அணைத்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார் பவ்னிந்தர் சிங்.

அந்தப் பதிவில் இருப்பது அமலாபால்தான் என ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட இருவரும் இதை உறுதி செய்யவில்லை. இந்நிலையில் புகைப்படம் வெளியாகி விட்டதால் தமது காதல் குறித்து அமலாபால் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனத் தெரிகிறது.