பழகிய நாட்கள்

பழகிய நாட்கள்

1 mins read
1ce66cb5-a20f-470f-9e43-5d79ade2a6ec
புதுமுகம் மீரான், மேகனா. படம்: ஊடகம் -

ராம்தேவ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'பழகிய நாட்கள்'. மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருடன் இணைந்து மேகனா நடித்துள்ளார். பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குநர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா, சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதேசமயம் பக்குவப்பட்ட காதல் என்பது காதலர்களின் வாழ்க்கையை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை இதில் அலசியுள்ளோம். படத்தில் சண்டைக் காட்சிகள் அறவே இல்லை," என்கிறார் ராம்தேவ்.