தனது மகன் சிம்பு நடிக்கும் 'மாநாடு' படம் வெளியாகும் அதேவேளையில், தனது புதுப்படத்தையும் வெளியிட வேண்டும் எனும் திட்டத்துடன் களம் இறங்கியுள்ளார்
டி.ராஜேந்தர். இவர் இயக்கி, நடிக்கும் அந்தப் புதுப்படத்தில் நாயகியாக நடிப்பவர் நமீதா.
திருமணத்துக்குப் பிறகு மிகவும் உடல் பெருத்துப்போன நிலையில் டி.ஆர். படத்துக்காக வெகுவாக இளைத்துள்ளாராம் நமீ. இதற்காக சில லட்சங்களைச் செலவிட்டதாகத் தகவல்.
தமிழ் சினிமாவில் சரிந்துபோன தனது மதிப்பை டி.ஆர். தூக்கி நிறுத்துவார் என்றும் தன் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் வகையில் மிக அழகான கதாபாத்திரத்தை அவர் அளித்திருப்பதாகவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் நமீதா கூறி வருகிறாராம்.
சிம்பு நடிக்கும் 'மாநாடு' படம் அடுத்த 4 மாதங்களுக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் டி.ஆர். படமும் வெளியாகக்கூடும். இப்படத்துக்கு டி.ராஜேந்தர் தான் இசையமைக்க உள்ளார்.

