புதுமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கமலி ஃப்ரம் (from) நடுக்காவேரி'.
புதுமுகம் ரோஹித் செராப், பிரதாப் போத்தன், அழகம் பெருமாள், இமான் அண்ணாச்சி, ரேகா சுரேஷ், பிரியதர்ஷினி ஆகியோரும் உள்ளனர்.
"காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி.
"அவளால் இரண்டையும் அடைய முடிந்ததா என்பதை விவரிக்கும் படம் இது. தெளிவான திரைக்கதையும் புதுமையான வசனங்களும் ரசிகர்களை நிச்சயம் கைதட்ட வைக்கும்.
"நான் புதுமுக இயக்குநர் தான். ஆனால் மக்களின் ரசனையை நம்பி படம் எடுக்கிறேன். இது ஒரு கவித்துவமான காதல் கதை. படம் வந்தபிறகு ஆனந்தியின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்படும்," என்கிறார் இயக்குநர் ராஜசேகர்.
தீனதயாளன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜகதீசன் லோகயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

