'இதற்கு மேல் நான் பேசமாட்டேன்'

'இதற்கு மேல் நான் பேசமாட்டேன்'

2 mins read
6a6009c9-68b3-4a20-9c9c-340b16c69995
'பிக்­பாஸ்' புகழ் தர்­ஷன், நடிகை சனம் ஷெட்டி இடை­யே­யான காதல் முறி­வ­தற்­குத் தாம் கார­ண­மல்ல என நடிகை ஷெரின் தெரி­வித்­துள்­ளார்.  படம்: ஊடகம் -

'பிக்­பாஸ்' புகழ் தர்­ஷன், நடிகை சனம் ஷெட்டி இடை­யே­யான காதல் முறி­வ­தற்­குத் தாம் கார­ண­மல்ல என நடிகை ஷெரின் தெரி­வித்­துள்­ளார்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக எழக்­கூ­டிய கேள்­வி­க­ளுக்கு தாம் இனி­மேல் பதில் சொல்­லப் போவ­தில்லை என அவர் கறா­ரா­கக் கூறி­யுள்­ளார்.

தர்­ஷன், சனம் ஷெட்டி இரு­வ­ரும் தீவி­ர­மா­கக் காத­லித்து வந்த நிலை­யில் 'பிக்­பாஸ்' போட்­டி­யில் பங்­கேற்­றார் தர்­ஷன். எனி­னும் போட்டி முடிந்த பிறகு சனம் ஷெட்­டி­யு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக அவ­ரைப் பிரிந்­தார்.

இதை­ய­டுத்து பிக்­பாஸ் வீட்­டில் அவர் நடிகை ஷெரி­னு­டன் நெருக்­க­மா­கப் பழ­கி­யதே காதல் முறி­வுக்­குக் கார­ணம் என்று கூறப்­பட்­டது. சனம் ஷெட்­டி­யும்­கூட சில பேட்­டி­களில் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்­தக் குற்­றச்­சாட்டு குறித்து இது­வரை எந்­த­வித கருத்­தும் தெரி­விக்­கா­மல் அமைதி காத்து வந்­தார் ஷெரின். எனி­னும் சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் அவரை விமர்­சித்­தும் ஏசி­யும் பதி­வி­டவே, தற்­போது தனது தரப்பு விளக்­கத்தை அளித்­துள்­ளார்.

தன்­னைப் பற்றி எவ்­வ­ளவு மோச­மாக விமர்­சித்­தா­லும் அதைப் புன்­ன­கை­யு­டன் ஏற்­றுக்­கொள்ள முடி­யும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், இந்த விவ­கா­ரத்­தில் தனது குடும்­பத்தை இழுக்­க­வேண்­டாம் எனக் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"கடந்த ஒரு மாதத்­துக்­கும் மேலாக நிறைய விஷ­யங்­கள் சொல்­லப்­பட்­டன. பல விஷ­யங்­கள் நடந்­தி­ருக்­கின்­றன. என்­னைத் தாக்க வேண்­டும் என்று நினைப்­ப­வர்­கள், அதைத் தாரா­ள­மா­கச் செய்­யட்­டும். அது­கு­றித்து நன்கு அறிந்­து­தான் இதில் நான் ஈடு­பட்­டேன்.

"என்னை நீங்­கள் எவ்­வ­ளவு மோச­மான பெயர்­கள் கொண்­டும் அழைக்­க­லாம். எனி­னும், போலி­யான கணக்­கு­க­ளுக்­குப் பின்­னால் ஒளிந்­து­கொண்டு, தாக்­கும் அரு­வெ­றுப்­பான கிண்­டல்­க­ளுக்கு நான் பதில் சொல்­ல­வேண்டி இருக்­கும் எனக் கன­வி­லும் நினைத்­துப் பார்க்­க­வில்லை," என்று ஷெரின் தெரி­வித்­துள்­ளார்.

மற்­ற­வர்­க­ளின் தவ­று­க­ளுக்­காக தம்­மைக் குற்­றம்­சாட்­டு­வது, தம்­மையே குற்­ற­வாளி போல் உணர வைக்­காது என்று குறிப்­பிட்­டுள்ள அவர், யாரைக் குற்­றம் சாட்­டு­வது என ஒழுங்­கா­கத் தெரிந்­து­கொண்டு செயல்­ப­டு­வது தான் நல்­லது என அறி­வு­றுத்தி உள்­ளார்.

அவ்­வாறு செய்­யா­மல் போனால் ஒரு­வர் குறு­கிய மனப்­பான்­மை­யும், குறு­கிய பார்­வை­யும் கொண்­ட­வ­ராக மாற நேரி­டும் என்­றும் கூறி­யுள்­ளார்.

"நான் அமை­தி­யாக இருப்­பதை எனது பல­வீ­ன­மா­கக் கரு­த­வேண்­டாம். இந்த விவ­கா­ரத்­தில் இனி­மேல் நான் எந்­த­வி­தக் கருத்­தும் கூற விரும்­ப­வில்லை. என்னை ஏசு­வது சில­ருக்கு அமை­தி­யைக் கொடுக்­கும் என்­றால் அவர்­கள் அதைச் செய்­யட்­டும்.

"இந்த விவ­கா­ரம் தொடர்­பாக இது­தான் என்­னு­டைய அதி­கா­ரப்­பூர்வ தக­வல். இனி­மேல் இது­கு­றித்து நான் எது­வும் பேச­மாட்­டேன்," என்று ஷெரின் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு செல்­வ­ரா­க­வன் இயக்­கத்­தில் வெளி­யான 'துள்­ளு­வதோ இளமை' படத்­தின் மூலம் தமிழ்த் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர் ஷெரின்.

'பிக்­பாஸ்' நிகழ்ச்­சிக்­குப் பிறகு அவ­ருக்­குப் புது வாய்ப்­பு­கள் ஏதும் தேடி வந்­த­தா­கத் தெரி­ய­வில்லை.