மலையாள நடிகை உத்தரா உண்ணி, கொரோனா பிரச்சினையால் தனது திருமண நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.
இவருக்கும் நரேஷ் என்பவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது.
"குறிப்பிட்ட நாளில், எங்களின் தாலிக்கட்டு நிகழ்ச்சி ஒரு கோவிலில் நடைபெறும். அதுகுறித்து பின்னர் அறிவிப்போம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
"எங்களது திருமணத்தில் பங்கேற்க வெளியூரில் இருப்பவர்கள் பயண ஏற்பாடுகளைச் செய்திருப்பீர்கள். எனினும் இந்த அறிவிப்புக்காக வருந்துகிறோம்," என்று உத்தரா உண்ணி தெரிவித்துள்ளார். தமிழில் 'வவ்வால் பசங்க' படத்தில் நடித்துள்ளார் உத்தரா.

