போராளி வேடத்தில் சாக்‌ஷி

போராளி வேடத்தில் சாக்‌ஷி

1 mins read
5ecc786f-81f1-44f1-8a49-ce653ac33e6a
'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பின்னர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காத தால் நடிகை சாக்‌ஷி அகர்வால் ஏமாற்றத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் 'புரவி' என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.  படம்: ஊடகம் -

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்குப் பின்னர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்காத தால் நடிகை சாக்‌ஷி அகர்வால் ஏமாற்றத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் 'புரவி' என்ற படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

ஜி.ஜே. சத்யா இயக்கும் இந்தப் படத்தில் சாக்‌ஷிக்குப் போராளி வேடமாம். முழுநீள அரசியல், அதிரடிப் படமாக உருவாகி வருகிறது.

இதில் சம்பத்ராம், ஷிமோர், சலீமா, அம்மன் சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். முகமது ஆசிப் இயக்கும் இந்தப் படம் கோடம்பாக்கத்தில் தனக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் சாக்‌ஷி.

போராளியாக நடிப்பதற்கு சில வெளிநாட்டுப் படங்களைப் பார்த்துக் குறிப்பெடுத்து வருவதாகவும் தகவல்.