ரெஜினா: மீண்டும் தமிழில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்துள்ளன

ரெஜினா: மீண்டும் தமிழில் நல்ல வாய்ப்புகள் தேடி வந்துள்ளன

2 mins read
3ddaaa54-e1fb-4bb1-bf3c-6b4b3884b396
கார்த்­திக் ராஜு இயக்­கும் 'சூர்ப்­ப­னகை' படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரெஜினா. படம்: இணையம் -

நன்­றாக நடித்­தும் சில வெற்­றிப்­ப­டங்­களில் பங்­க­ளிப்பு செய்­தும் தங்­க­ளுக்­கு­ரிய வாய்ப்­பு­கள் சரி­வர கிடைப்­ப­தில்லை என சில கதா­நா­ய­கி­கள் புலம்­பிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

பிறர் செய்­யும் தவ­று­க­ளால் தங்­க­ளுக்கு இந்த நிலை ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

ரெஜினா கசான்ட்ரா தமி­ழில் நடித்த ஒன்­றி­ரண்டு படங்­கள் தோல்வி கண்­டன.

எனி­னும் இவர் நடிப்­பில் சோடை போக­வில்லை. விமர்­சன ரீதி­யில் ரெஜி­னா­வின் நடிப்­புக்கு நல்ல பாராட்டு கிடைத்­தது.

எனி­னும் வாய்ப்­பு­கள் அமை­யா­த­தால், தெலுங்­குப் பக்­கம் ஒதுங்­கி­னார். அங்கு ஒன்­றி­ரண்டு படங்­கள் வெற்றி பெற்­றதை அடுத்து, ஹைத­ரா­பாத்­தி­லேயே நிம்­ம­தி­யாக முகா­மிட்­டி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் 'சூர்ப்­ப­னகை' படம் மூலம் அவரை மீண்­டும் கோடம்­பாக்­கத்­துக்கு அழைத்து வந்­துள்­ள­னர். கார்த்­திக் ராஜு இயக்­கும் இந்­தப் படத்­தில் ரெஜி­னா­வின் கதா­பாத்­தி­ரத்­துக்கு உரிய முக்­கி­யத்­து­வம் அளிக்­கப்­பட்­டுள்­ள­தாம். அது­மட்­டு­மல்ல, முதல்­மு­றை­யாக இரட்டை வேடங்­களில் நடித்­துள்­ளார். இதற்­கி­டையே அருண்­வி­ஜய்­யு­டன் புதுப்­ப­டம் ஒன்­றில் இவரை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

"திறமை இருந்­தும் வாய்ப்­பின்­றித் தவித்த நிலை­யில், மீண்­டும் தமி­ழில் கவ­னிக்­கப்­படும் நாய­கி­யாக உரு­வெ­டுக்­கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. எனவே இந்த இரு படங்­க­ளி­லும் கூடு­தல் கவ­னம் செலுத்தி வரு­கி­றேன். கார்த்­திக் ராஜு சார் மிக நேர்த்­தி­யாக படத்தை உரு­வாக்கி வரு­கி­றார். "அருண் விஜய் இன்று தமிழ்த்­தி­ரை­யு­ல­கின் முக்­கி­ய­மான நாய­கன் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும். அவ­ரு­டன் இணைந்து நடிப்­பது உண்­மை­யா­கவே பெரிய வாய்ப்பு," என்று உற்­சா­கத்­து­டன் பேசு­கி­றார் ரெஜினா.

இவ­ரைப் போலவே நல்ல வாய்ப்­பு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கும் மற்­றொரு நடிகை நிவேதா பெத்­து­ராஜ். தற்­போது 'பொன் மாணிக்­க­வேல்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். மார்ச் மாதத் துவக்­கத்­தி­லேயே இப்­படம் வெளி­யா­கும் என பெரி­தும் நம்­பி­யி­ருந்­தா­ராம். ஆனால் திடீ­ரென படத்­தின் வெளி­யீட்­டைத் தள்­ளிப் போட்­டி­ருக்­கி­றார்­கள். இத­னால் நிவேதா பெரி­தும் ஏமாற்­றத்­துக்­குள்­ளாகி இருக்­கி­றார். "படம் உரிய நேரத்­தில் வெளி­யாகி வெற்றி பெறும்­போது எங்­க­ளுக்­கு­ரிய புதிய வாய்ப்­பு­கள் தேடி­வ­ரும். ஆனால் இப்­போது அத்­த­கைய வாய்ப்­பு­களை இழந்து நிற்­கி­றோம்," என நிவேதா பெத்­து­ராஜ் கூறி­யுள்­ளார்.