ரகுல்: நிலைமை மாற வேண்டும்

ரகுல்: நிலைமை மாற வேண்டும்

2 mins read
1c4b95e1-33db-43a3-ab6e-8b417b240eba
சிலர் ஆபா­ச­மாக ஏசி கருத்­து­க­ளைப் பதி­வி­டு­கி­றார்­க­ளாம். இது­கு­றித்து தற்­போது மனந்­தி­றந்து  பேசி­யுள்­ளார் ரகுல். படம்: ஊடகம் -

நடி­கை­கள் குறித்து சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் மிக மோச­மா­கப் பதி­வி­டு­வது வருத்­த­ம் அ­ளிப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார் நடிகை ரகுல் பிரீத்­ சிங்.

பெண்­களை இந்­தச் சமூ­கம் வெறும் போதைப்­பொ­ரு­ளா­கப் பார்க்­கிறது என்­றும், இத்­த­கைய நிலை மாற­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தமிழ்ச் சினி­மா­வில் தற்­போது வாய்ப்­பு­கள் குறைந்­துள்ள போதி­லும் தனக்­கென ரசி­கர் கூட்­டத்தை உரு­வாக்கி உள்­ளார் ரகுல் பிரீத்­ சிங்.

அவ்­வப்­போது சமூக வலைத்­த­ளங்­களில் தனது கவர்ச்­சிப் படங்­களை வெளி­யி­டு­வது, ரசி­கர்­க­ளு­டன் உரை­யா­டு­வது, இவ­ரது வழக்­க­மாக உள்ளது.

இந்­நி­லை­யில் இவ­ரைப்­பற்றி சிலர் மோச­மாக விமர்­சிக்­கி­றார்­க­ளாம்.

சிலர் ஆபா­ச­மாக ஏசி கருத்­து­க­ளைப் பதி­வி­டு­கி­றார்­க­ளாம். இது­கு­றித்து தற்­போது மனந்­தி­றந்து பேசி­யுள்­ளார் ரகுல்.

"நடி­கை­களை சிலர் கேவ­ல­மா­கப் பார்க்­கி­றார்­கள். சினி­மா­வில் நடிப்­ப­வர்­கள்­தானே... நம்மை என்ன செய்­து­விட முடி­யும் என்­றும் நினைக்­கி­றார்­கள்.

அத­னால்­தான் இப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளால் சமூக வலைத்­த­ளங்­களில் என்­னைப் பற்றி ஆபா­ச­மா­க­வும், கீழ்த்­த­ர­மா­க­வும் கருத்­து­க­ளைப் பதி­விட முடி­கிறது," என்று குறிப்­பிட்­டுள்ள ரகுல், இத்­த­கைய செயல்­பா­டு­கள் மன­த­ள­வில் தம்மை மிக­வும் பாதித்­துள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் சிலர் எல்லை மீறிப் போவ­தாக அவர் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார். இத்­த­கைய போக்­கைக் கண்டு தமக்கு அவ்­வப்­போது கோபம் வரு­வ­தா­க­வும், அதை வெளிப்­ப­டுத்­தா­மல் இருக்க முடி­ய­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

"பெண்­களை நம் சமூ­கம் போதைப் பொரு­ளா­கப் பார்க்­கிறது. இந்­நிலை மாற­வேண்­டும். அண்­மை­யில் ரசி­கர் ஒரு­வர் சமூக வலைத்­த­ளத்­தில் நான் அணிந்­தி­ருக்­கும் ஆடை குறித்து எல்லை மீறி ஆபா­ச­மா­கப் பதி­விட்­டார். இத­னால் எனக்­குக் கோபம் வந்­தது. அவ­ரைக் கடு­மை­யாக திட்டி பதிவிட்டேன்.

"போலிக் கணக்­கு­கள் பின்­னால் ஒளிந்­து­

கொண்டு உண்­மை­யான முகத்தை வெளிக்­காட்ட துணி­ச்சல் இல்­லாத கோழை­கள் பலர் உள்­ள­னர். இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள்­தான் சமூக வலைத்­த­ளங்­களில் ஆபாச கருத்­து­க­ளைப் பதி­வி­டு­கின்­ற­னர்," என்று ரகுல் பிரீத்­சிங் கோபத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

சமூக வலைத்­த­ளங்­களில் போலிக் கணக்­கு­க­ளைத் தொடங்க முடி­யாத நிலையை உரு­வாக்க வேண்­டும் என்­றும், அப்­போ­து­தான் ஆபா­சப் பதி­வு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யும் என்­றும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே பிர­சாந்த் நடிக்­கும் புதிய படத்­தில் ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்­ப­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. இதை அவ­ரது தரப்பு இன்­னும் உறுதி செய்­ய­வில்லை. வாய்ப்பு இல்லை என்­றா­லும் சம்­ப­ளத்தை குறைக்­கப் போவ­தில்லை எனத் திட்­ட­வட்­ட­மா­கச் சொல்­கி­றா­ராம் ரகுல் பிரீத் சிங்.