கொரோனா அச்சம் பலரை வீட்டுக்குள் முடங்க வைத்துள்ளது. இந்நிலையில், தம்மால் உடற்பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியவில்லை எனப் புலம்பிக் கொண்டிருக்கிறார் இந்தி நடிகை கேத்ரினா கைஃப்.
இது தொடர்பாக அவர் காணொளி ஒன்றை வெளியிட்டு, வீட்டில் இருந்தபடியே எவ்வாறு உடற்பயிற்சிகளை தொடரலாம் என விவரித்துள்ளார்.
பிரபல உடற்பயிற்சியாளருடன் இணைந்து கேத்ரினா சில உடற்பயிற்சிகள் செய்யும் காட்சிகள் அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளன.
"கொரோனா பாதிப்பால் உடற்பயிற்சிக் கூடத்துக்குப் போகமுடியவில்லை. இதை நினைத்தால் எரிச்சலாக வருகிறது. அதனால் நானும் எனது பயிற்சியாளரும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்கிறோம். இதை நீங்களும் பின்பற்றுங்கள், பாதுகாப்பாக இருங்கள்," என்று அறிவுறுத்தி உள்ளார் கேத்ரினா.

