வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா

வெற்றி மாறன் படத்தில் ஆண்ட்ரியா

1 mins read
2ca40cda-2d3d-4c8c-8e58-35c97728dff5
மீண்டும் வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் ஆண்ட்ரியா. இவருடன் நடிகை லவ்லின்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்.  படம்: ஊடகம் -

மீண்டும் வெற்றிமாறன் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் ஆண்ட்ரியா. இவருடன் நடிகை லவ்லின்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்.

ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை'யில் நாயகியாக நடித்திருந்தார் ஆண்ட்ரியா. வெற்றிமாறன் இயக்கத்தில் தேசிய விருது வென்ற 'ஆடுகளம்' படத்தில் டாப்சிக்குப் பின்னணி குரல் கொடுத்ததும் இவர்தான்.

"வெற்றிமாறன் எப்போதுமே மாறுபட்ட கதைக் களங்களில் தரமான படங்களை அளிப்பவர். இவரது இயக்கத்தில், தயாரிப்பில் நடிப்பதென்றால் யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை.

"அவர் இயக்கிய படங்களும் சரி, தயாரித்த 'காக்கா முட்டை', 'விசாரணை' ஆகிய படங்களும் சரி வரவேற்பைப் பெற்றுள்ளன. மீண்டும் அவரது இயக்கத்தில் நடிப்பது மகிழ்ச்சி தருகிறது," என்கிறார் ஆண்ட்ரியா.