'இது தாமதமாக கிடைத்த நீதி'

'இது தாமதமாக கிடைத்த நீதி'

2 mins read
8b6ff097-dc8c-4f8e-8af0-111650d53fd6
ஏழாண்­டு­க­ளுக்­குப் பிறகு நிர்­பயா வழக்­கில் நீதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்று உண்­மை­யா­கவே நீங்­கள் நினைக்­கி­றீர்­களா? என்று வரலட்சுமி கேள்வி எழுப்­பி­யுள்­ளார். படம்: ஊடகம் -

மருத்­துவ மாணவி நிர்­பயா பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தூக்­குத்­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது குறித்­துப் பல­ரும் பல்­வேறு கருத்­து­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

இது­தொ­டர்­பாக பிர­த­மர் மோடி டுவிட்­ட­ரில் பதி­விட்­டி­ருந்­தார். நீதி நிலை­நாட்­டப்­பட்­டுள்­ளது என்­றும், பெண்­க­ளின் கண்­ணி­யத்­தை­யும் பாது­காப்­பை­யும் உறுதி செய்­வது முக்­கி­யம் என்­றும் அவர் அப்­ப­தி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

பிர­த­ம­ரின் இந்­தப் பதி­வைக் குறிப்­பிட்டு நடிகை வர­லட்­சுமி சரத்­கு­மார் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் கருத்து தெரி­வித்­துள்­ளார்.

அதில், ஏழாண்­டு­க­ளுக்­குப் பிறகு நிர்­பயா வழக்­கில் நீதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்று உண்­மை­யா­கவே நீங்­கள் (பிர­த­மர்) நினைக்­கி­றீர்­களா? என்று அவர் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

"குற்­றம் நடந்து குறைந்­தது 6 மாதங்­களில் மர­ண­தண்­ட­னை என்பதை நாம் வலி­யு­றுத்­தும் நேரம் இது என்று உங்­க­ளுக்­குத் தோன்­ற­வில்­லையா? இந்­தக் குற்­றங்­க­ளால் பெண்­கள் உயி­ரி­ழப்­பது சரி­யென்று நினைக்­கி­றீர்­களா? அவர்­க­ளுக்கு நாம் தாம­த­மாக நீதி வழங்கி இருக்­கி­றோம்," என்று வர­லட்­சுமி தமது பதி­வில் மேலும் சில கேள்­வி­களை அடுக்­கி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் பாலி­யல் குற்­ற­வாளி என நிரூ­பிக்­கப்­பட்ட மறு­நாளே சம்­பந்­தப்­பட்­ட­வ­ரை தூக்­கி­லிட வேண்­டும் என்று நடிகை நமீதா வலி­யு­றுத்தி உள்­ளார். நிர்­பயா வழக்­கில் குற்­ற­வா­ளி­கள் தூக்­கி­லி­டப்­பட்­டது தமக்கு மகிழ்ச்சி அளித்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

நிர்­பயா பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தைப் போல் நாட்­டில் இன்­னொரு சம்­ப­வம் நிகழ்ந்­து­வி­டக்­கூ­டாது என்­றும் அர­சாங்­கம் இது தொடர்­பாக சட்­டத்­தை கடு­மை­யாக்க வேண்­டும் என்­றும் நமீதா தெரி­வித்­துள்­ளார்.

"குற்­ற­வா­ளி­க­ளுக்­குத் தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது மகிழ்ச்சி தரு­கிறது. எனி­னும் இந்த நீதி கிடைக்க ஏழாண்­டு­கள் ஆகி­விட்­டன. எதற்­காக நமது நாட்­டில் இதற்கு இவ்­வ­ளவு தாம­தம் ஏற்­ப­டு­கிறது என்­பதை ஆராய வேண்­டும். வருங்­கா­லத்­தில் இது­போன்ற குற்­றங்­க­ளுக்கு உடனே தண்­டனை வழங்­க­வேண்­டும். பாலி­யல் குற்­ற­வா­ளி­கள் என உறு­தி­யான பிறகு மறு­நாளே தூக்­கி­லிட வேண்­டும்," என நமீதா மேலும் வலி­யு­றுத்தி உள்­ளார்.

தெலுங்கு முன்­னணி நடி­கர் மகேஷ் பாபு கூறு­கை­யில், மோச­மான குற்­றங்­க­ளுக்கு தற்­போது இருப்­பதை விட மேலும் கடு­மை­யான தண்­ட­னை­கள் வழங்­கப்­பட வேண்­டும் எனத் தெரி­வித்­துள்­ளார். சட்­டங்­கள் கடு­மை­யாக்­கப்­பட்டு தீர்ப்­பு­கள் விரை­வாக வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தியுள்­ளார்.

" 'இது நீண்ட காத்­தி­ருப்பு' தான். ஆனால் நீதி கிடைத்து ­விட்­டது. நிர்­பயா வழக்­கின் தீர்ப்­பா­னது நீதித்­துறை மீதான நம்­பிக்­கை­யைக் காப்­பாற்றி உள்­ளது. துவண்­டு­வி­டா­மல் தொடர்ந்து போரா­டிய நிர்­பயா பெற்­றோ­ருக்­கும் வழக்­க­றி­ஞர்­க­ளுக்­கும் என் வணக்­கங்­கள். நீதித்­து­றை­யை­யும் வணங்­குகி­றேன்," என மகேஷ்­பாபு மேலும் தெரி­வித்­துள்­ளார்.