அவதூறு பரப்பிய நடிகர் மீது லாவண்யா போலிசில் புகார்

அவதூறு பரப்பிய நடிகர் மீது லாவண்யா போலிசில் புகார்

1 mins read
c84320a6-52a0-4eb9-9aa5-edcc1cdb100e
தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய நடிகர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. படம்: ஊடகம் -

தன்னைப் பற்றி அவதூறு பரப்பிய நடிகர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி.

'பிரம்மன்', 'மாயவன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் சுனிஷித் அண்மைய பேட்டி ஒன்றில் லாவண்யாவை தாம் திருமணம் செய்து கொண்டதாகவும், பிறகு விவாகரத்து பெற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் லாவண்யா மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இது தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சுனிஷித் கூறியது அப்பட்டமான பொய் என்றும் மலிவான விளம்பரத்துக்காக அவர் தன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தி இருப்பதாகவும் லாவண்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து சுனிஷித் மீது போலிசில் அவர் புகார் அளித்துள்ளார்.