எஸ்.ஜெய்சங்கர் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், சுபிக்ஷா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேட்டை நாய்'. மேலும் ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, 'என் உயிர்த் தோழன்' ரமா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். "கதைப்படி, கதாநாயகன் ஒரு முரடன். ஆனால் அடிப்படையில் நல்லவன். எந்தளவு நல்லவன் என்று அவனுக்கே தெரியாது. அவனை குழந்தைத்தனமாக உள்ள நாயகி காதலிக்கிறாள். ஒருகட்டத்தில் அவன் யார் என்பதை புரிந்துகொள்ள வைக்கிறாள். இவர்களுக்கிடையே காதல் மலர்கிறது. கூடவே சில பிரச்சினைகளும் முளைக்கின்றன. நேரெதிர் குணாதிசயங்களைக் கொண்ட இருவரால் இணைய முடியுமா? அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னவாகின்றன? என்பதே கதை," என்கிறார் இயக்குநர் ஜெய்சங்கர். படம் விரைவில் திரைகாண்கிறது.
முரடனைக் காதலிக்கும் குழந்தைத்தனமான பெண்
1 mins read
-

